சஙகஇலககயஙகள சடடம தரமணச சடஙககள: Marriage rituals highlighted in Sangam literature
களவொழுக்கத்தின் தொடர்ச்சியாக வருவது கற்பொழுக்கமாகும். களவு என்பது கற்பில் முடியாவிட்டால் சிறப்புறாது. ஆதலால் தமிழ்ச்; சான்றோர் திருமணத்தை வலியுறுத்தினர். களவொழுக்கத்தில் பெண்பாலருக்கென்று வரையறுக்கப்பட்ட அச்சம்இ மடம். நாணம். பயிர்ப்பு எனச் சுட்டப்படும் நான்கு பெருங்குணங்களின் தொகுதியான கற்பு என்பது வேறு. கற்பியலில் சுட்டப்பெறும் கற்பு என்பது வேறு. முன்னது மகளிரோடு உடன் தோன்றி அவர்களிடம் இயற்கையாக அமைந்த ஒருவகைப் பண்பாகும். இது தலைவி. தோழிஇ செவிலி. நற்றாய் என்னும் நால்வருக்குமே உரியது. பின்னது பண்பு அன்று. தலைமக்கள் இருவரிடையே நிகழும் இவர்களுக்குப் பெரியோர்களால் நிகழ்த்தி வைக்கப்படும் ஒரு நிகழ்வாகும். இது கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே என்னும் நூற்பாவால் விளங்கும். இங்கு கற்பு ஒரு பண்பாகச் சுட்டப்படாததை உணரலாம். களவில் கூறப்படும் ‘செயிர்தீர் காட்சிக் கற்பு’ என்பது நிகழ்வாகாது பண்பாதலையும் அறியலாம்
Authors
- முனைவர் இரா.பபித்ரா
Publication Details
- Journal
- KALANJIYAM - International Journal of Tamil Studies
- Published
- 2026-11-01
- DOI
- https://doi.org/10.63300/kijts603112026.11
- Primary Topic
- Indian and Buddhist Studies
- Type
- article
- Field-Weighted Citation Impact
- 0.00