வளபரயல கறஞச நலம
வேளிர்குல வேள்பாரி கடையேழு வள்ளல்களுள் தலைசிறந்தவன். “முல்லைக்குத் தேர் ஈந்தவன் பாரிீ என்ற தொடர் மட்டும் பாரியை அனைவரிடத்திலும் கொண்டு போய்ச் சேர்த்தது. அன்பு, அறம், வீரம், போர்த்திறம், இயற்கை அறிவு, வானியல் அறிவு, குடிகளை அரவணைத்துக் காத்த பெருமை, சிறந்த ஆளுமைத் திறன் என்று பல்வேறு பெருமைகளையும் ஒருசேரக் கொண்டவன் வேள்பாரி. மூவேந்தர்களையும் வென்ற மாபெரும் வீரன். பறம்பிற்காகப் பாரியா! பாரிக்காகப் பறம்பா! எனும் அளவுக்குப் பாரியின் குடிப்பெருமை வளர்ந்தோங்கி இருக்கின்றது. மனிதன் இயற்கையைச் சார்ந்தே வாழ வழிப்பட்டவன் என்பதை வேள்பாரி நாவலைக் கொண்டு அறியலாம். பாரியின் பறம்பு மலையில் வாழ்ந்த பல குடிகளைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் அறியும் போது நமது முன்னோர்களின் திறமைகளைப் பற்றிக் குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது. அன்பின் ஆதி வடிவம், வீரத்தின் விளைநிலம், கருணையின் பிறப்பிடம், வள்ளல் தன்மையின் சுரபி, இயற்கையின் நாயகன், குடிகளின் புகலிடம் என வேள்பாரியின் புகழையும், பெருமையையும் பற்றிச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
Authors
- த. மோகனாம்பாள்
Publication Details
- Journal
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Published
- 2025-10-14
- DOI
- https://doi.org/10.5281/zenodo.17570397
- Primary Topic
- Ottoman and Turkish Studies
- Type
- article
- Field-Weighted Citation Impact
- 0.00