வளபரயன கடசபபதவகளம படஙகளம
உலக மொழிகளில் மூத்த மொழியான இன்தமிழ் மொழியின் இலக்கிய வளங்களில் கதை கேட்டலும் கதை கூறலும் ஒரு முக்கிய வடிவமாக்கி கருவினை உருவாக்கி பெருக்கி வளம் சேர்த்துள்ள தன்மை தனிச்சிறப்புடையதாகும். அக்கதைகள் முழுமையும் உண்மைச் சரித்திரங்களாகவும் உண்மை நிகழ்வுகளாகவும் அமைதல் என்பது ஒரு நிலை. மற்றொரு நிலை உண்மையுடன் கற்பனை கலத்தல் பண்பாட்டைக் கலத்தல் என்பன போன்றன. மூன்றாம் வகையின் முழுமையும் கற்பனைத் தன்மையுடையதாகவே அமைதல் என்பதான சிறப்பினை உடையதாகும். அவ்வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில், வீரமன்னர்களின் சரித்திரத்தில், வள்ளல் குணமடைய தயவாளர்களின் பட்டியலில் என்ற எல்லா நிலையிலும் தம் பெயரைப் பகிர்ந்து கொண்ட பாரியின் கதையினை கதைக்களமாகக் கொண்டு வேள்பாரி அமைந்துள்ளது. இங்கு கதையின் போக்கிற்கு மெருகூட்டும் வகையில் அமைந்தவருணனைகளின் வழி கிடைக்கும் பாடங்களை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
Authors
- கே. இரா. கமலாமுருகன்
Publication Details
- Journal
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Published
- 2025-10-14
- DOI
- https://doi.org/10.5281/zenodo.17570286
- Primary Topic
- Media Discourse and Social Analysis
- Type
- article
- Field-Weighted Citation Impact
- 0.00