பறமப மலயனரன நலவயல பணபட
இலக்கியத்தின் மையம் மனிதன் எனில் பண்பாட்டின் மையமும் மனிதனே. நிலம், காலம், சூழல் இனம் ஆகியவற்றின் பன்மை பண்புகளின் தொடர்ச்சியாக பண்பாட்டையும் இலக்கியத்தையும் அணுகலாம். இலக்கியம் பண்பாடு ஆகிய குறித்த வரையறைகள் தனித்தனியே சொல்லப்பட்டாலும் இரண்டுக்குமான தொடர்பு இறுக்கமானது. பண்பாட்டின் ஒரு கூறு இலக்கியம் என்பது ஏற்கத்தக்கது. இலக்கியம் மொழிசார் கலையாகும். அது வாய்மொழி எழுத்துமொழி ஆகிய இரண்டு சார்ந்து மொழியில் நிலை கொள்ளும் இலக்கியம் தன்னை பண்பாட்டு வெளியாகவே வெளிப்படுத்துகிறது. இனவரைவியல் என்பதை பண்பாட்டை மொழி பெயர்த்தல் என்பார் பக்தவச்சல பாரதி. பண்பாட்டின் வேர்களை அறிய பழங்குடிச் சமூகங்களில் இருந்தும் வாய்மொழி மரபுகளில் இருந்தும் தொடங்க வேண்டியிருக்கிறது. எனவே தான் பண்பாடு குறித்த கற்றலுக்கும் ஆ#வுக்கும் மானுடவியல் புலம் ஓர் கற்கை நெறியாக அமைகிறது. திணை சார் நிலவியலை களமாகக் கொண்ட வேள்பாரி புதினம் இயற்கையுடன் ஒன்றறக் கலந்து வாழும் பறம்பு மலைப்பழங்குடியினரின் பண்பியல் பிழிவாக படைக்கப்பட்டு மானுடவியல் புலத்தின் இனவரைவியல் படைப்பாக்க அறிவியலாக விரிவுகொள்கிறது எனும் பொருண்மையை ஆய்வுநோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.
Authors
- ச. அருள்செல்வி
Publication Details
- Journal
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Published
- 2025-10-14
- DOI
- https://doi.org/10.5281/zenodo.17570327
- Primary Topic
- Turkish Literature and Culture
- Type
- article
- Field-Weighted Citation Impact
- 0.00