வரயக நயகன வளபர நவலல உணவம வரநதமபலம
பண்டைத் தமிழர்கள் சுவைமிக்க உணவுகளைச் சமைப்பதில் தேர்ச்சி பெற்று இருந்தனர். ஐவகைநிலத்திற்கேற்ப உணவுவகையும்,சமைக்கும் முறையும் வேறுபட்டிருந்தது. மக்களின் பொருளாதார நிலையும் உணவின் தரம் வேறுபட்டிருக்கக் காரணமாக இருந்தது. சைவ உணவுடன் அசைவ உணவும் விரும்பி உண்ணப் பட்டது. மதுவகைகளை அருந்துவதும் சங்க காலத்தின் உணவின் பகுதியாகவே கருதப்பட்டது. இரவலர்க்கு அளிக்கப்படும் விருந்துகளில் அசைவ உணவு வகைகளே பரிமாறப்பட்டன. என அறிகிறோம். தமிழ் இலக்கியங்களில் உணவு, விருந்தோம்பல் குறித்த பதிவுகள் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளன. சங்ககால வள்ளல்களில் ஒருவர் வேள்பாரி. இவருடைய வரலாற்றை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட “வீர யுக நாயகன் வேள்பாரி” புதினத்தில் இடம் பெற்றுள்ள உணவும் விருந்தோம்பலும் சார்ந்த செ#திகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்துவரும் 14 இனக் குழுக்களுக்கு தலைமையாக வேளிர்குலம் விளங்குகிறது. அதன் தலைவனாக இருப்பவன் வேள்பாரி. வேள் என்பது வேளிர் என்பதன் அடிப்படையில் தோன்றிய சொல் ஆகும். பறம்புமலையை ஆட்சி செய்த சிற்றரசனாக வேள்பாரி அறியப்படுகிறான். வேளிர் குலத்தின் வசம் உள்ள தேவவாக்கு (தேவாங்கு) விலங்கை கைப்பற்ற குலசேகர பாண்டியன் நினைக்கிறான். அதில் தோல்வியடைந்த பாண்டிய மன்னன், சேர, சோழ மன்னர்களையும் தன்னோடு இணைத்துக் கொண்டு, பறம்பு மலையை முற்றுகையிடுகிறான். பாரிக்கும் மூவேந்தர்களுக்கும் நடைபெற்ற இந்தப் போரும் அது சார்ந்த செய்திகளும் தான் இந்த நாவலின் கதையாக அமைகிறது. இதில் திணை சார்ந்த மக்களின் வாழ்வியலும் அவர்களின் உணவுப் பழக்கவழக்கமும் நுட்பமாக விவரிக்கப்பட்டுள்ளது.
Authors
- கே. நிவேதா
Publication Details
- Journal
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Published
- 2025-10-14
- DOI
- https://doi.org/10.5281/zenodo.17570230
- Primary Topic
- Cultural and Sociopolitical Studies
- Type
- article
- Field-Weighted Citation Impact
- 0.00