வரயக நயகன வளபரயல தமழரன உணவப பணபடகள
மனிதன் தொன்மைக் காலத்திலிருந்தே இன்றுவரை வாழ்வதற்கும் போராடுவதற்கும் அத்தியாவசியமான அடிப்படைத் தேவையாக உணவு இருந்து வருகிறது. உணவு என்பது மனிதனுக்கே அல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான தேவையாகும். எந்த உயிரினமும் உணவின்றி வாழ முடியாது. பசியைத் தீர்க்கும் செயலை “உண்ணுதல்” என்றும், அதற்கு ஆதரவாக அமையும் பொருளை “உணவு” என்றும் பொதுவாக வரையறுக்கப்படுகிறது. மனித சமூகத்தில், உணவு வெறும் உடல் தேவையோடு மட்டுப்படாமல், அந்த சமூகத்தின் பண்பாட்டு, பொருளாதார, அரசியல், வாழ்வியல் மற்றும் புவியியல் அம்சங்களை பிரதிபலிக்கும் முக்கியக் குறியீடாகவும் திகழ்கிறது. தமிழினத்தின் நீண்ட வரலாற்றுப் பாதையில் உணவுப் பழக்கவழக்கங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கல்வெட்டுகள், புதைப்படிமங்கள், செப்பேடுகள் போன்றவை முக்கிய வரலாற்று ஆதாரங்களாகக் கருதப்பட்டாலும், மக்களின் வாழ்வியலை ஆராய்வதற்கு கலை இலக்கியங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாகப் பழமையான தமிழ் இலக்கியங்கள், சங்ககால மக்களின் உணவுப் பழக்கங்களை வெளிப்படுத்தும் சிறந்த ஆதாரங்களாக அமைகின்றன.இலக்கியச் சான்றுகள் தமிழர்கள் தங்கள் நிலத்தன்மைக்கு ஏற்ப உணவுப் பழக்கவழக்கங்களை உருவாக்கியிருந்ததைக் காட்டுகின்றன. உணவுத் தயாரித்தல், உண்ணுதல், விருந்தேற்பது ஆகியவற்றில் அவர்கள் கடைப்பிடித்த தனித்துவமான முறைகள் இலக்கியங்களில் தெளிவாகக் காணப்படுகின்றன. இதனால், தொன்மையான தமிழ்ச் சமூகத்தின் உணவுப் பழக்கங்களை அறிந்து கொள்வதோடு, அக்கால மக்களின் முழுமையான வாழ்வியலையும் புரிந்துகொள்ள இயலும். இத்தகைய உணவுப் பழக்கங்களைப் பற்றிய ஆய்வுகளை இலக்கியச் சான்றுகளும் களஆய்வுகளும் வழியே பல ஆய்வாளர்கள் வெளிக்கொணர்ந்துள்ளனர். அவற்றின் அடிப்படையில் புனைவுகளும் தோன்றியுள்ளன. அவற்றுள் ஒன்றாக எழுத்தாளர் வெங்கடேசன் எழுதிய வரலாற்றுப் புதினமான வீரயுக நாயகன் வேள்பாரியில் காணப்படும் உணவுப் பழக்கங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Authors
- திவ்ய தர்ஷினி தி ஜெ
Publication Details
- Journal
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Published
- 2025-10-14
- DOI
- https://doi.org/10.5281/zenodo.17570416
- Primary Topic
- Culinary Culture and Tourism
- Type
- article
- Field-Weighted Citation Impact
- 0.00