வளபர எனனம பதனம உணரததம இனககழ சமதயம
தொடக்கத்தில் ஐவகை நில அடிப்படையில் மக்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்தனர். அப்போது வேந்தன், அரசாட்சி என்ற நிலை அவர்களிடம் இல்லை. கால மாற்றத்தால் மக்களை அதிகாரம் செய்யதலைப்பட்ட போது வேந்தன், அரசன், அரசாட்சி என்ற நிலை உருவானது. இந்நிலை உருவாக பல இனங்கள் அழிக்கப்பட்டுள்ளது. சு.வெங்கடேசன் வேள் பாரி புதினத்தில் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரியின் வரலாற்றை எடுத்துரைத்துள்ளார். இன்றுவரை வள்ளல்களுள் ஒருவராகப் பேசப்படும் பாரியை வேந்தர் என்று குறிப்பிட்டதில்லை. அவன் வேளிர் என்னும் குலத்திற்குத் தலைவன் ஆவான். வேளிர்குலம் மட்டுமின்றி பல்வேறு குலங்கள் தொடக்கத்தில் குழுக்களாக வாழ்ந்துள்ளது. அக்குலங்கள் என்ன என்பதை இதுவரை யாரும் அறிந்ததில்லை. பதினான்கு வேளிர்குடிகள் என்று சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட நிலையில் அவ்வேளிர்குடிகளின் நிலை, பிற குடிகளின் நிலை என்ன என்பதை இப்புதினத்தில் எடுத்துரைத்துள்ளார்
Authors
- மா.சங்கரேஸ்வரி
Publication Details
- Journal
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Published
- 2025-10-14
- DOI
- https://doi.org/10.5281/zenodo.17570373
- Primary Topic
- Ottoman Empire History and Society
- Type
- article
- Field-Weighted Citation Impact
- 0.00