மழயழகல தவழம வரயக நயகன வளபர
மனிதம் இயற்கையோடுஇயைந்த நிலையைக்காட்டும் வரலாற்று நாவல் வீரயுக நாயகன் வேள்பாரி. பல இனக்குழுக்களைஅழித்தே பேரரசுகள் உருவாகினஎன்பதை மிக நேர்த்தியாகஎடுத்துக் கூறியிருக்கும் இந்நாவல்தமிழக வரலாற்றின் மறைக்கப்பட்டபகுதிகளைச் சான்றுகளுடன் எடுத்துக்காட்டியுள்ளது. வரலாறு, கதைகளாகக் கூறப்படும்போதுஅதில் சில புனைவுகள் சேர்ப்பது படைப்பிற்கு மேலும் அழகூட்டும் என்பது நாம் கல்கியின்பொன்னியின் செல்வன் நாவலின் மூலம் அறிந்ததே. சு.வெங்கடேசன் அவர்கள் தம் வேள்பாரி நாவலில் உண்மை, புனைவு இரண்டினையும் பிரித்துப் பார்க்க டியாதவகையில் நாவலைப் படைத்திருப்பது அவரின்இலக்கியத்திறனைக்காட்டுகிறது. மொழி நடையே இலக்கியத்தின் சிறப்பினைஉணர்த்திவிடும் என்பதற்கு சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை சான்று பகர்கின்றன. அந்த வகையில் வீரயுக நாயகன் வேள்பாரி, தொடக்கம் முதல் நிறைவுப் பகுதிவரை மொழிஆளுமையில்நிறைந்திருக்கக் காணலாம். அத்தகைய மொழிஆளுமைக் கூறுகளை நிரல்படுத்திக் காட்டுவதே இக்கட்டுரையின் சாரமாகும். மொழியாலும் புனைவாலும் மதம் பிடித்த ஒருவரால் மட்டுமே இப்படியொரு காவியத்தை உருவாக்க முடியும். என்று வெய்யில் கூறியிருப்பதை, நாவல் வாசிக்கும் ஒவ்வொருவராலும் உணரமுடியும். ஒரு சிறந்த நூலானது பத்துஅழகுகளைக்கொண்டிருக்க வேண்டும் என நன்னூல்கூறுகின்றது.
Authors
- ம.ராணி
Publication Details
- Journal
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Published
- 2025-10-14
- DOI
- https://doi.org/10.5281/zenodo.17570167
- Primary Topic
- Swearing, Euphemism, Multilingualism
- Type
- article
- Field-Weighted Citation Impact
- 0.00