வரயகநயகன வளபரயன இறமடச
உலகில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்று வரையறுத்து, வையத்து வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் வாழ்வியல் நூல் திருக்குறள். வாழ்க்கையின் ஒவ்வொரு கூறையும் ஆரா#ந்து அவற்றிற்கு தகுந்த அறிவுரைகளைத் திருவள்ளுவர் திருக்குறள் வழி வழங்கியுள்ளார். இல்லறம், துறவறம் ஆகிய கோட்பாடுகளைக் கடைப்பிடித்து வாழும் நெறியை அறத்துப்பாலில் கூறப்பட்டிருக்கிறது. அதுபோல், அரசர்களும் அமைச்சர்களும் கடைபிடிக்கும் பண்புகளை விளக்கமாகவும் தெளிவாகவும் வள்ளுவர் கூறியிருப்பதை பொருட்பாலில் அரசியல், அமைச்சியல் போன்ற பகுதிகளில் காணலாம். குறிப்பாக, இறைமாட்சி என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர் மன்னனுக்கு இருக்க வேண்டிய பண்புநலன்களைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு அக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்களைத் தவிர வேறு சிறப்பான சான்றுகள் இல்லை. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியை மையமாக வைத்து படைக்கப்பட்ட புனைகதையான வீரயுகநாயகன் வேள்பாரியில் பாரியாகிய கதைத் தலைவனின் பண்புகளைத் திருக்குறளில் வள்ளுவர் கூறிய இறைமாட்சி கருத்துக்களோடு ஒப்பிட்டு காணும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
Authors
- போ. அனு
Publication Details
- Journal
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Published
- 2025-10-14
- DOI
- https://doi.org/10.5281/zenodo.17570161
- Primary Topic
- Ottoman Empire History and Society
- Type
- article
- Field-Weighted Citation Impact
- 0.00