Lifestyle of Parathaiyar as Shown by Kalittokai
The ancient grammar and literature of the Tamil language mention the main characters in the Aga life of the people as Thalaivan, Thalaivi, and Dozhi. In this, Parathaiyar is the one who has the same characteristics as Thalaivi. The incidents about Parathaiyar have been mentioned by Tolkappiyar in the Kalaviyal. As drama characters, one of the five dynasties of Marutha, in the epic poems of Sangam literature, the events of Parathaiyar's life are recorded as the reason for the conflict between Thalaivan and Thalaivi. There are records about Parathaiyar in Thirukkural. Agapporul Vilakkam very clearly explains on what basis Parathaiyar is divided. Thus, Parathaiyar is notable among the egoists mentioned in grammar and literature. Parathaitar is the one who is often credited with the rights to the Marutha. This article is based on the lifestyle of Prathaiyar found in the Kalittokai Maruthakali songs to illustrate the qualities and virtues of Parathaiyar. தமிழ்மொழியின் பண்டைய இலக்கண, இலக்கியங்கள் கூறும் மக்களின் அக வாழ்க்கையில் முதன்மையானவர்கள் தலைவன், தலைவி, தோழி ஆவர். இதில் தலைவிக்கு நிகரான பண்புடையவராகத் திகழ்பவர் பரத்தையர் ஆவர். பரத்தையர் பற்றிய நிகழ்வுக் கூற்றுகளைத் தொல்காப்பியர் களவியலில் குறிப்பிட்டுள்ளார். நாடகப் பாத்திரங்களாக, ஐந்திணைகளில் ஒன்றான மருத நிலத்தில் தலைவிக்கும் தலைவனுக்கும் இடையில் பிரிவு தோன்றுவதற்குக் காரணமாகப் பரத்தையரின் வாழ்க்கை நிகழ்வுகள் சங்க அகப்பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருக்குறளில், பரத்தையர் பற்றிய பதிவுகள் உள்ளன. அகப்பொருள் விளக்கம் பரத்தையர் எத்தகைய தன்மை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளார் என்று மிகவும் தெளிவாக விளக்குகின்றது. இதனால் இலக்கண, இலக்கியங்கள் எடுத்துக்கூறும் அக மாந்தர்களுள் குறிப்பிடத்தக்கவர், மருதத்திற்கே பெரும்பாலும் உரிமை பூண்டு விளங்குபவர் பரத்தையர் எனலாம். கலித்தொகை மருதக்கலிப் பாடல்களில் காணப்படும் பரத்தையர் உறவுப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு பரத்தையரின் பண்பு நலங்களை, வாழ்வியலை எடுத்துக்கூறுவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
Authors
- முனைவர் இரா.பிரியதர்ஷினி
Institutions
- Social Service Sericulture Project Trust (IN)
Publication Details
- Journal
- Tamilmanam International Research Journal of Tamil Studies
- Published
- 2025-07-01
- DOI
- https://doi.org/10.63300/tm0110202507
- Primary Topic
- Phytochemicals and Medicinal Plants
- Type
- article
- Field-Weighted Citation Impact
- 0.00